உலகோடு ஒத்து வாழ்...



 

உலகோடு ஒத்து வாழ்தல் என்பது ஒரு முக்கியமான வாழ்க்கை நெறி. தனிமரம் எப்போதும் காடாகாது. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. இவையெல்லாம் உலகோடு ஒத்துவாழவேண்டும் என்பதற்க்காக நமது முன்னோர்கள் கூறின வாக்குக்கள். அது நமக்கு மகிழ்ச்சியையும் அமைதியையும் தரும். எப்படி உலகோடு ஒத்து வாழலாம் என்று சில கருத்துக்களைப் பகிர்கிறேன்:

  • மற்றவர்களைப் புரிந்து கொள்ளுங்கள்: ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பின்னணி, எண்ணங்கள், மற்றும் உணர்வுகள் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மற்றவர்களின் பார்வையில் இருந்து விஷயங்களைப் பார்க்க முயற்சி செய்யுங்கள். அடுத்தவரின் நடவடிக்கையில் உள்ள நியாயத்தை புரிந்துகொள்ளுங்கள்.
  • பொறுமையாக இருங்கள்: உலகம் எப்போதும் நாம் நினைப்பது போல் நடக்காது. மாற்றங்களையும் தாமதங்களையும் ஏற்றுக்கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள். அகழ்வாரை தாங்கும் நிலம்போல தம்மை இகழ்வாரை பொறுத்தல் தலை என்னும் குறளை மனதில் நிறுத்துங்கள்.
  • கருணையுடன் நடந்து கொள்ளுங்கள்: மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும், ஆதரவாக இருப்பதிலும் மகிழ்ச்சி காணுங்கள். சிறிய கருணைச் செயல்களும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். காலத்தினால் செய்த உதவி சிறிதாயின்னும், அஃது ஞாலத்தின் மானபெரிது.
  • சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும்: இயற்கையோடு இயைந்து வாழுங்கள். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத செயல்களைச் செய்யுங்கள். இயற்கை மனிதனுக்கு மட்டுமல்ல, உலகின் எல்லா ஜீவராசிக்கும் என்பதனை உணருங்கள்.
  • கற்றுக்கொண்டே இருங்கள்: உலகம் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது. புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும், உங்கள் அறிவை மேம்படுத்துவதற்கும் தயாராக இருங்கள். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதனை எப்போதும் மறவாதீர்கள்.
  • நம்பிக்கையுடன் இருங்கள்: எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்த்து, நேர்மறையான கண்ணோட்டத்துடன் வாழ்க்கையை அணுகுங்கள். நம்பிக்கையே வெற்றிக்கு அடித்தளம் என்பதனை திடமாக நம்புங்கள்.
  • தன்னம்பிக்கையுடன் இருங்கள்: உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள் பலத்தையும் பலவீனத்தையும் அறிந்து, உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள். அடுத்தவர்கள் உங்களை நம்பும் முன் உங்களை நீங்கள் நம்புங்கள் உங்களால் எல்லாம் முடியும் என்று.
  • விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை: சில சமயங்களில் மற்றவர்களுக்காக விட்டுக்கொடுத்துப் போவது உறவுகளை வலுப்படுத்தும். விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை. கெட்டுபோகுபவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை.
  • மகிழ்ச்சியாக இருங்கள்: வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் ரசியுங்கள். சிறிய விஷயங்களில் கூட மகிழ்ச்சியைக் காணுங்கள். வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக இருப்பதற்க்கே. மகிழ்யுற்ற மனமே மற்றவரை மகிழசெய்யும். உலகினை மகிழ்வானதாக்கும்.

  •  என்றும் மகிழ்வுடன்
  • உங்கள் ஆனந்த்

Comments

Popular posts from this blog

யாதும் ஊரே, யாவரும் கேளிர்

ஒற்றுமை தான் பலம் Unity is Strength

எல்லாம் முடியும், அதற்க்கு நாமே பொறுப்பு